கடலை மாவை இப்படி பயன்படுத்தினால் முகம் நிலவு போன்று பொலிவாகும்!

0
135
#image_title

கடலை மாவை இப்படி பயன்படுத்தினால் முகம் நிலவு போன்று பொலிவாகும்!

முகத்தில் கொப்பளம், கரும்புள்ளி, தேமல், கருமை, முகச் சுருக்கம், வறட்சி இல்லாமல் இருந்தால் பார்க்க மிகவும் அழகாக இருக்கும். ஆனால் இன்றைய சுற்றுச்சூழல் மாசுபாடு, உணவுமுறை பழக்கம் போன்றவற்றால் முகத்தில் பல வித பாதிப்புகள் ஏற்படுகிறது.

முகத்தில் ஏற்படும் இதுபோன்ற பாதிப்புகளை முழுமையாக குணமாக்க கடலை மாவு பேக் தயாரித்து பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

*கடலை பருப்பு
*தயிர்
*பன்னீர்
*கற்றாழை ஜெல்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் இரு தேக்கரண்டி கடலை மாவு சேர்க்கவும். அதன் பின்னர் அதில் 1/4 தேக்கரண்டி தயிர் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி பன்னீர் சேர்த்து கலக்கவும். பிறகு ஒரு கற்றாழை மடலில் இருந்து ஜெல்லை பிரித்து எடுத்து தண்ணீரில் அலசவும். இந்த கற்றாழை ஜெல் ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து நன்கு கலக்கவும்.

இந்த கடலை மாவு பேஸ்டை முகத்திற்கு அப்ளை செய்வதற்கு முன்னர் சுத்தமான பாலில் ஒரு காட்டன் பஞ்சு நினைத்து அதை முகத்தில் மஜாஜ் செய்யவும். பிறகு தயாரித்து வைத்துள்ள கடலை மாவு பேஸ்டை முகத்தில் தடவி சில நிமிடங்கள் மஜாஜ் செய்யவும்.

அரை மணி நேரத்திற்கு பிறகு குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவிக் கொள்ளவும். இவ்வாறு செய்து வருவதன் மூலம் கரும்புள்ளி, கொப்பளம், தேமல், கருமை நீங்கி முகம் நிலவு போன்று பொலிவு பெறும்.