மருத்துவ அவசரம் என்று கள்ளக்காதலி வீட்டுக்கு சென்றவர் அங்கேயே அடைப்பு! நாகையில் ரணகளத்திலும் கிளுகிளுப்பு..!!

0
83

மருத்துவ அவசரம் என்று கள்ளக்காதலி வீட்டுக்கு சென்றவர் அங்கேயே அடைப்பு! நாகையில் ரணகளத்திலும் கிளுகிளுப்பு..!!

காரில் மருத்துவ அவசரம் என்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு கள்ளக்காதலி வீட்டுக்கு செல்ல முயன்ற நபர் வீட்டிலேயே அவர் நினைத்த இடத்திலே தனிமைபடுத்தப்பட்டார்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் தலைஞாயிறு அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் அமுதா. கடந்த நாட்களில் தனது கணவரைப் பிரிந்து மலேசியாவில் ஓட்டல் வேலைக்கு சென்றார். அப்போது அங்கிருந்த அப்துல் அகமது மைதீன் என்பவருடன் அமுதாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தவறான உறவை அறிந்த பிறகு மைதீனின் மனைவி அவரை பிரிந்து சென்றுவிட்டார்.

இந்நிலையில் மலேசியாவில் இருந்து வேலை முடித்து தலைஞாயிறு அக்ரஹாரம் பகுதியில் இருந்த தனது வீட்டில் அமுதா தங்கியிருந்தார். இதையடுத்து தனது கள்ளக்காதலியை பார்க்காமல் ராமநாதபுரத்தில் தவித்து வந்த அப்துல் அகமது ஊரடங்கு அமலில் இருப்பதால் ஏக்கத்துடன் எப்படி சந்திப்பது என்று யோசித்துள்ளார். பின்னர் கள்ளக்காதலியை சந்திக்க தனது காரில் மருத்துவ அவசரம் என்ற ஸ்டிக்கரை ஒட்டி சொகுசுகாரில் அமுதா வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார்.

வாகனத்தைப் பார்த்த சுகாதாரத்துறையினர் மற்றும் காவல்துறையினர் அமுதாவின் வீட்டில் சென்று சோதனை நடத்தினர். அங்கு அமுதா அவரது மகன் மற்றும் மகள்கள் ஆகிய நான்கு பேர் இருந்தனர். வாகன ஸ்டிக்கர் குறித்து விசாரித்தபோது ராமநாதபுரத்தில் இருந்து கள்ளக்காதலியை பார்க்க நாகை வரவே மருத்துவ அவசரம் என ஸ்டிக்கர் ஒட்டியதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அப்துல் அகமது மைதீன், அமுதா அவரின் குழந்தைகள் உட்பட 6 பேரும் அதே வீட்டில் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பால் பொதுமக்கள் வீட்டில் முடங்கி அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமலும், சமூக இடைவெளியில் தவித்து வரும் சூழலில் கள்ளக்காதலியை பார்க்க ஸ்டிக்கர் ஒட்டி வந்த சம்பவம் பலருக்கு கோபத்தை உண்டாக்கியுள்ளது. இந்த இக்கட்டான ரணகளத்திலும் கிளுகிளுப்பு கேட்கிறதா என்றும் பலர் விமர்சித்து வருகின்றனர்.

author avatar
Jayachandiran