மக்கள் அனைவருக்கும் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !! இன்று தொடங்கும் இலவச மருத்துவ முகாம் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் !!
கருணாநிதி நூற்றாண்டு விழா இந்த ஆண்டு முழுவதும் கொண்டாப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார் . இதனையொட்டி தமிழகம் முழுவதும் இன்று 100 இடங்களில் மெகா மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த மருந்துவ முகாம்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இந்த முகாம் இன்று காலை 8 முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமின் மூலம் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது.
மேலும் இந்த முகாம் சென்னையில் 10 இடங்களிலும், பிற மாவட்டங்களில் 90 இடங்களிலும் நடைபெறுகிறது.
சென்னையில் மாநகராட்சியில் கத்திவாக்கம் சென்னை நடுநிலைப்பள்ளி, புத்தாகரம் கல்கி மான்போர்டு பள்ளி, புதுவண்ணாரப்பேட்டை மேல்நிலைப்பள்ளி, ராயபுரம் சி.எஸ்.ஐ. நார்த்விக் அரசு மேல்நிலைப்பள்ளி, அத்திப்பட்டு வெங்கடேஸ்வரா மெட்ரிகுலேஷன் பள்ளி, விளிவாக்கம் சிவன் கோவில் தெரு நடுநிலைப்பள்ளி, புலியூர் சென்னை நடுநிலைப்பள்ளி மதுரவாயல் அரசினர் மேல்நிலைப்பள்ளி, ஆலந்தூர் பொன்னியம்மன் கோவில் தெரு நிதி பள்ளி, பெருங்குடி பாலாஜி நகரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய 10 இடங்களில் நடைபெறவுள்ளது.
மேலும் இந்த முகாமில் தமிநாடு அரசின் முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதமர் மக்கள் ஆரோக்ய திட்டம் கீழ் புதிய பயனாளிகள் பதிவு செய்து கொள்ளவும் வசதி உள்ளது .
இந்த மெகா சிறப்பு முகாமில் சிறுநீரக பரிசோதனை, எக்கோ மற்றும் இசிஜி பரிசோதனை , இரத்த பரிசோதனை மற்றும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்ப பை பரிசோதனை, பொது அறுவை சிகிச்சை கண், காது,மூக்கு,தொண்டை,எலும்பு,பல் உள்ளிட்ட பல பிரிவுகளின் பரிசோதனை நடைபெறுகிறது.
இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கேட்டுக்கொன்டுள்ளர்.