பிளிப்கார்டின் புதிய ஆப்ஷன் “ஓப்பன் பாக்ஸ் டெலிவெரி!! இனி கவலை வேண்டாம்!!

0
219
Flipkart's new option “Open Box Delivery!! Worry no more!!
Flipkart's new option “Open Box Delivery!! Worry no more!!

பிளிப்கார்டின் புதிய ஆப்ஷன் “ஓப்பன் பாக்ஸ் டெலிவெரி!! இனி கவலை வேண்டாம்!!

இ-காமர்ஸ் தற்போது நம் வாழ்க்கையில் முக்கிய பங்கினை அளித்து வருகிறது. அந்த வகையில் பிளிப்கார்ட் நிறுவனம் தன்னுடைய ஏராளமான பொருட்களை மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறது.

தற்போது இந்த நிறுவனம் புதிதாக ஓப்பன் பாக்ஸ் டெலிவெரி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை கருதி மற்றும், அவர்கள் பொருட்கள் வாங்கும் வழிமுறையில் உள்ள நம்பிக்கையை பாதுகாக்கும் விதமாக இந்த புதியத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த திட்டம் வாடிக்கையாளர்கள் தாங்கள் ஆர்டர் செய்த பொருட்களை பெரும் முன்னரே அதனை சோதனை செய்து பார்க்க முடியும். இதனை ஓப்பன் பாக்ஸ் டோர் டு டோர் டெலிவெரி முறை என்று கூறுகின்றனர்.

இதன் மூலம் ஆர்டர் செய்த பொருட்கள் சரியாக நமக்கு அனுப்பப்பட்டுள்ளதா, அது நல்ல நிலையில் இருக்கிறதா, என்பதை சோதித்து விட்டு அதன் பிறகு நாம் அந்த பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த முறையின் மூலம் நாம் ஆர்டர் செய்த பொருளை பிளிப்கார்ட் நபரின் முன்னிலையில் அதை ஓப்பன் செய்து பொருள் சரியாக வந்திருக்கிறதா என்பதை சரிபார்த்துக்கொண்டு பிறகு அவரிடம் OTP யை சொல்லி பொருளை பெற்றுக்கொள்ளலாம்.

வாடிக்கையாளர் கேஷ் ஆன் டெலிவெரி தேர்ந்தெடுத்திருக்கும் பட்சத்தில் பெட்டியை திறக்கும் முன்பாக பணத்தை செலுத்தியிருக்க வேண்டும். நாம் ஆர்டர் செய்த பொருள் மாறி வந்து விட்டால் அதை உடனடியாக பிளிப்கார்ட் நபரிடம் கொடுத்து, உங்கள் பணத்தை திரும்ப வாங்கிக்கொள்ளலாம்.

இந்த ஓப்பன் பாக்ஸ் டெலிவெரி முறைக்கு எந்த வித கட்டணமும் தேவை இல்லை. இது முழுக்க முழுக்க வாடிக்கையாளரின் நலனுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இதன் மூலம் பொருட்களை திறந்து பார்த்து அது பிடிக்கவில்லை என்றால் திரும்ப பிளிப்கார்ட் நிறுவனத்துக்கே அனுப்பி உங்கள் தொகையை பெற்றுக்கொள்ளலாம்.

இதனால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் இல்லாத மகிழ்ச்சியான ஷாப்பிங்கை செய்வார்கள். மேலும் இது வாடிக்கையாளரின் நம்பிக்கையையும், உறுதியையும் பெறுவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் பயன்பெறுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

author avatar
CineDesk