கரோனா பரவல் குறித்து முக்கிய தகவல்!! மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!!

0
207
Important information about the spread of Corona!! Notification of Central Health Department!!
Important information about the spread of Corona!! Notification of Central Health Department!!

கரோனா பரவல் குறித்து முக்கிய தகவல்!! மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!!

கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து பரவ ஆரம்பித்த ஒரு கொடிய நோய் தான் கரோனா. இது உலகத்தில் ஒரு நாடு பாக்கி இல்லாமல் அனைவரையும் சூறையாடிக் கொண்டிருந்தது.
இதனால் நாள்தோறும் ஒரு நாடு விடாமல் அனைவரும் இதனால் பாதிக்கப்பட்டு இறந்தனர்.

ஒரு நாளைக்கு கோடிக்கணக்கான மக்கள் இந்த கரோனாவால் பாதித்து உயிரிழந்த சம்பவம் உலகையே திக்கு முக்கு ஆடச்செய்தது. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது தான் கரோனா பாதிப்பு 50 க்கும் கீழ் குறைந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

நாள்தோறும் கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது இந்தியாவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை ஒரு நாளில் 36 ஆக உள்ளது.

2020 ஆம் ஆண்டிலிருந்து மொத்தமாக தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,49,93,579 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும் இந்த 24 மணி நேரத்தில் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

எனவே இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 5,31,893 ஆக உள்ளது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1,844 ஆக பதிவாகி உள்ளது.
மொத்தம் 4,44,59,838 பேர் கரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

எனவே குணமடைந்தோரின் எண்ணிக்கை 98.81 சதவிகிதமாக உள்ளது.
இதுவரையில் 220.66 கோடி டோஸ் கரோனா தடுப்பூசிகள் நாடு முழுவதும் தடுப்பூசி இயக்கத்தின் கீழ் செலுத்தப்பட்டுள்ளன.

Previous articleவானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! இந்த மாவட்டங்களில் தொடரும் கனமழை!!
Next articleபழக்கடையில் தினமும் பணத்தை திருடிய நூதன திருடன்! கண்காணிப்பு கேமராவை பார்த்த உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!