மெட்ரோ பயணிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இந்த அட்டை இருந்தால் மட்டுமே வாகனம் நிறுத்த அனுமதி!

0
260
Important information for metro passengers! Parking is allowed only with this card!
Important information for metro passengers! Parking is allowed only with this card!

மெட்ரோ பயணிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இந்த அட்டை இருந்தால் மட்டுமே வாகனம் நிறுத்த அனுமதி!

மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பணம் இல்லாத  பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் விதமாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு மெட்ரோ ரயில் பயண அட்டை மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் திறமையான வசதிக்கான மற்றும் பாதுகாப்பான கட்டண முறைக்காகவும், பணப்புழக்கத்தை குறைக்க வேண்டிய தேவைக்காகவும் இந்த முடிவு  எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேகமாக நுழைவது, வெளியேறுவது பரிவர்த்தனைகளில் வெளிப்படுத்த தன்மை, பணமில்லா பரிவர்த்தனை போன்ற நன்மைகள் கிடைக்கும். பயணிகள் மெட்ரோ ரயில் பயண அட்டையை அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்களிலும், வாகனம் இருக்கும் இடத்தில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது, பயண அட்டைகளுடன் மட்டுமே இந்த பயணத்தை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நடைமுறை அடுத்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி அமலுக்கு  வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அனைத்து பயணிகளும் மெட்ரோ ரயில் பயண அட்டைகளை விரைவாக பெற சென்னை மற்றும் ரயில் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் கடந்த ஆண்டு முதலமைச்சர் தலைமையில் போக்குவரத்து குழுமத்தின் ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது.

அதில் மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்முறைக்கு வந்தது. அந்த வகையில் பேருந்து மற்றும் புறநகர் ரயில் மெட்ரோ ரயில் என அனைத்திலும் ஏற்பட்டும் வரும் சிரமத்தை குறைப்பதற்காக ஒரே பயணச்சீட்டு வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Previous articleபெண் ஊழியர்களுக்கு இந்த விடுப்பு இனி இல்லை! மத்திய மந்திரி ஸ்மிரிதி ராணி வெளியிட்ட தகவல்!
Next article14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!