மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! பள்ளிகளில் பாடத்திட்டம் மாற்றம் அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதன் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். அனைத்து பகுதிகளுக்கும் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. மேலும் தற்போது 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அரசு அறிவிப்பு போன்ற வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் ஐந்து ஆண்டு கட்டமைப்பு என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதன் மூலம் மூன்று முதல் எட்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு நர்சரி முதல் இரண்டாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் திறனை மேம்படுத்த இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.
மேலும் இந்த பாடத்திட்டத்திற்கு தயாராக வேண்டுமென ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் திறனை இந்தப் பாடத்திட்டத்தின் மூலம் பல மடங்கு மேம்படுத்தப்பட வேண்டும் என்பதே இந்த மாற்றத்திற்கான நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.