TNPSC தேர்வர்களுக்கு வெளியான முக்கிய தகவல்!! தமிழக அரசு அறிவிப்பு!!
பல்வேறு அரசு பணிகளுக்காக கோடி கணக்கான மக்கள் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் எழுதக்கூடிய ஒரு தேர்வு தான் டிஎன்பிஎஸ்சி. கடந்த ஆண்டு இந்த டிஎன்பிஎஸ்சி யில் கால்நடை உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் பணிக்கென மொத்தம் 731 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
இதற்கான தேர்வு கடந்த மார்ச் மாதத்தில் கணினி அடிப்படையில் நடத்தப்பட்டது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக 56 ஆயிரம் முதல் இரண்டு லட்சம் வரை வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில், தேர்வு முடிவுகளின் அடிப்படையில் தேர்வானவர்களின் விவரங்கள் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளின் அடிப்படையில் 1:3 என்ற விகித்தத்தில் விண்ணப்பதாரர்கள் அனைவரும் அவர்களது ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர தகவல்கள் வெளியாக உள்ளது.
விண்ணப்பதாரர்கள் அனைவரும் தங்களது ஆன்லைன் விண்ணப்பங்களை ஒப்படைக்கும்போது அவர்கள் இதற்கு முன்பாக பதிவேற்றம் செய்து வைத்த சான்றிதழ்களின் அடிப்படையில் இந்த சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.
மேலும், இவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு திரையில் பார்க்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி ஆணையம் அறிவித்துள்ளது. தேர்வர்களின் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று அறிந்து கொள்ளவும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக காலியாக உள்ள கால்நடை உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் பணிக்கான 731 பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட இருக்கிறது.
மேலும், இதற்கான வேலைகள் தமிழக அரசு சார்பில் விரைவாக நடைபெற்று வருகிறது. மக்களின் நன்மைக்காக தினம்தோறும் ஏராளமான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை தமிழகம் வெளியிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.