இன்று மீண்டும் உயர்ந்த தக்காளி விலை!! கடும் அதிருப்தியில் மக்கள்!!

0
37

இன்று மீண்டும் உயர்ந்த தக்காளி விலை!! கடும் அதிருப்தியில் மக்கள்!! 

தக்காளி விலை நேற்று உயர்ந்ததை தொடர்ந்து விலை உயர்ந்துள்ளது. கடுமையான அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அனைத்து மக்களும் பயன்படுத்தும்  இன்றியமையாத காய்கறிகளில் ஒன்று தக்காளி. தென்னிந்திய சமையலில் அனைத்து குழம்பு, கூட்டு, சாம்பார் என அனைத்து சமையல் வகைகளில் இடம் பிடித்த தக்காளி ஒரு காலத்தில் ஏழைகளின் அன்றாட குழம்பு வகைகளில் ஒன்றாக இருந்தது. ஆனால் தற்போது ஏழைகள் யாரும் நினைத்து கட பார்க்க முடியாத அளவிற்கு இதன் விலை உயர்வு விண்ணை முட்டி நிற்கிறது.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலும்  ஜெட் வேகத்தில் இதன் விலையானது உயர்ந்து கொண்டு போகிறது. கனமழை காரணமாக தக்காளி உற்பத்தியில் பாதிப்பு, காய்கறி வரத்து குறைவு ஆகிய இரண்டும் தக்காளி விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.

இந்த நிலையில் நேற்று 15 உயர்ந்து 100 ரூபாய் விற்கப்பட்ட தக்காளி இன்று மேலும் பத்து ரூபாய் உயர்ந்து 110 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த இரு நாட்களாக தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். தக்காளியின் வரத்து தற்போது மிகவும் குறைவாக இருப்பதால் விலை உயர்ந்துள்ளதாக மார்க்கெட் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.