8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. தமிழக அரசு திடீர் உத்தரவு..!!

Photo of author

By Divya

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. தமிழக அரசு திடீர் உத்தரவு..!!

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் திறனாய்வு தேர்வு நடத்துவது வழக்கம். அந்த வகையில் இந்த 2023-2024 ஆம் ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் தேர்வு வருகிற பிப்ரவரி மாதம் 25 அன்று நடைபெற இருக்கிறது.

இந்த தேர்வு நடத்தவதற்கு முக்கிய நோக்கம் ஏழை, எளிய மாணவர்களுக்கு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஊகத்தொகை வழங்கி கல்வி கற்க உதவிட வேண்டும் என்பது தான். அந்தவகையில் இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.1000 ஊகத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்ட தேர்வு எழுத தகுதி:

*மாணவர் குடும்பத்தின் ஆண்டு வருமான 3.50 லட்சத்திற்கும் கீழ் இருக்க வேண்டும்.

*7 ஆம் வகுப்பில் 55% மந்திபெற்றிருக்க வேண்டும்.

*அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள 8 ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே இந்த தேர்வை எழுத முடியும்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25 அன்று இந்த தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்வுக்கான விண்ணப்பம் செய்தவர்கள் விண்ணபத்தை ஜனவரி 22 ஆம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு 50 ரூபாய் கட்டணத்துடன் பள்ளி தலைமை ஆசியர்களிடம் வழங்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து ஒருசில மாவட்டங்களில் வெள்ள நீர் வடியாமல் இருப்பதால் மாணவர்களால் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவசகமானது தற்பொழுது நீடிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி டிசம்பர் 27 ஆம் தேதி வரை மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்து இருக்கிறது. இதனால் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வந்த மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.