பப்ளிக் எக்ஸாம் எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Photo of author

By Divya

பப்ளிக் எக்ஸாம் எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Divya

பப்ளிக் எக்ஸாம் எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் படிக்கும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதத்தில் இருந்து பொதுத்தேர்வு ஆரம்பமாக உள்ளது.

தற்பொழுது 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற்று வரும் நிலையில் நாளை முடிவடைய உள்ளது. அதேபோல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் திங்கட்கிழமை அன்று தொடங்க உள்ள செய்முறை தேர்வு அடுத்த சனிக்கிழமை அன்று முடிவடைய உள்ளது.

பொதுத் தேர்வு

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மார்ச் 01 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 04 ஆம் தேதி தொடங்கி மார்ச் 24 ஆம் தேதி நிறைவு பெறுகிறது.

மேலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி நிறைவு பெறுகிறது.

இந்நிலையில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு நுழைவு சீட்டு(ஹால்டிக்கெட்) வருகின்ற பிப்ரவரி 20 ஆம் தேதியில் இருந்து பள்ளி தலைமை ஆசிரியர்களால் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குனரகம் தெரிவித்து இருக்கின்றது.

https://www.dge.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID, Password பதிவிட்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து அவர்களுக்கு வழங்குமாறு தெரிவித்துள்ளது.