ஒரு சில பெண்களுக்கு மார்பக வளர்ச்சி இருக்காது. அவர்கள் பருவமடைந்த பின்பு, திருமணத்திற்கு பின்பும் கூட அவர்களுக்கு மார்பக வளர்ச்சி இருக்காது. இதற்கு காரணம் ஈஸ்ட்ரோஜன் என்கிற ஹார்மோன் குறைவாக சுரப்பதுதான்.
ஈஸ்ட்ரோஜன் குறைவாக சுரப்பதால்தான் பெண்களின் மார்பகங்கள் சிறிதாக இருக்கிறது. ஈஸ்ட்ரோஜன் இயல்பாக சுரப்பதற்கு, இயற்கை உணவுகளையும், நல்ல ஊட்டச்சத்து மிக்க உணவுகளையும் உண்ண வேண்டும். பெண்களின் மார்பக வளர்ச்சிக்கு உதவ கூடிய, ஈஸ்ட்ரோஜன் சுரப்பை அதிகரிக்கக் கூடிய ஒரு பானத்தை பற்றி பார்க்கலாம்.
நாம் இதற்கு சோம்பைதான் பயன்படுத்த போகிறோம். சோம்பில் ஈஸ்ட்ரோஜன் அதிக அளவில் இருப்பதால் இது மார்பக வளர்ச்சிக்கு உதவுகிறது.முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றவும்.
தண்ணீர் கொதித்தவுடன் அதில் 2 ஸ்பூன் சோம்பு போட்டு நன்றாக 5 முதல் 10 நிமிடம் வரை கொதிக்க விடவும். 1 கிளாஸ் தண்ணீர் பாதியாக ஆகும் வரை கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி விடவும்.
பிறகு சிறிது ஆறியவுடன், அதாவது வெதுவெதுப்பாக இருக்கும் போது, அதனுடன் 1 ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த தண்ணீரை வெதுவெதுப்பாக தான் குடிக்க வேண்டும். இந்த சோம்பு தண்ணீரை காலை, மாலை என இரு வேளை குடிக்கவும். இரவில் படுப்பதற்கு முன் குடிக்கவும்.