சீனாவில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும்

0
196
உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியின் இறுதி கட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 34 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 2 கோடியே 46 லட்சத்து 5 ஆயிரத்து 238 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்த நிலையில் சீனாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்திய பிறகு சீனாவில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சில பள்ளிகள் திறக்கப்பட்டன. குறைந்த அளவிலான மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் ஷிப்டு முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் கொரோனா தொற்று நோய் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதால் அங்கு பள்ளிகளை முழுமையாக திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அடுத்த வாரம் முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous articleவிளையாட்டு துறையில் அதிகரிக்கும் பரிசுத்தொகை
Next articleஅர்ஜெண்டினாவில் கட்டுப்பாடு இல்லாத ஊரடங்கு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here