இந்தியா-ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் போட்டி- இன்று 2வது நாள் ஆட்டம்!

Photo of author

By Parthipan K

இந்தியா-ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் போட்டி- இன்று 2வது நாள் ஆட்டம்!

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூரில் நடந்த தொடக்க டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி டேவிட் வார்னரும், உஸ்மான் கவாஜாவும் ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்சை தொடங்கினர்.  நேற்றைய ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 78.4 ஓவர்களில் 263 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. ஹேன்ட்ஸ்கோம்ப் 72 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். இந்திய தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டும், அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் தனது முதல் இன்னிங்சை இந்தியா ஆடியது. ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ரன் எடுத்துள்ளது. இரண்டாவது நாள் ஆட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.