இந்த பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் இந்தியா

0
130
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது.குறிப்பாக இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்துள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 89 ஆயிரத்து 706 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 34 ஆயிரத்து 506 பேருக்கும், பிரேசிலில் 34 ஆயிரத்து 208 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் கொரோனா வேகமாக பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 80 லட்சமாக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 70 லட்சத்து 20 ஆயிரத்து 305 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர்.
Previous articleஅரியர் மாணவர்களே தேர்வு எழுத தயாராக இருங்கள்:! அரியர் தேர்வைப்பற்றி தமிழ்நாடு அரசு கூறியது? முழுவிபரம்!
Next articleமீண்டும் சரக்கு கப்பலில் தீவிபத்தா?