‘இந்தியா ஒரே நாடு அல்ல’ சர்ச்சையில் சிக்கிய ஆராசா! வெளுத்து வாங்கிய பாஜக மூத்த தலைவர்!

0
283
#image_title

‘இந்தியா ஒரே நாடு அல்ல’ சர்ச்சையில் சிக்கிய ஆராசா! வெளுத்து வாங்கிய பாஜக மூத்த தலைவர்!

இந்தியா என்பது ஒரே நாடு அல்ல என்ற திமுக எம்பி ஆ ராசாவின் கூற்றை காங்கிரஸ் ஏற்றுக்கொள்கிறதா என்று பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்தியாவின் அடையாளத்தை அவமதிப்பது இந்தியா கூட்டணியின் வாடிக்கையாக மாறிவிட்டதாகவும், இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் மதிப்பீடுகளை வெளிப்படையாகவே அவமதிப்பது தான் அவர்களது கொள்கையா எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.

“பாரத் மாதா கி ஜெய்” என்பதை ஏற்க மாட்டோம் என்று வெளிப்படையாகவே திமுக எம் பி ஆ ராசா குறிப்பிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆ ராசாவின் இந்த கூற்றை ராகுல் காந்தி சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் ஏற்றுக் கொள்கிறார்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.

வெற்றி விளம்பரத்திற்காகவே காங்கிரஸ் கட்சியினர் கோவிலுக்கு செல்வதாக குற்றச்சாட்டியுள்ளார்.

இந்தியர்களின் நம்பிக்கைகளையும் மதிப்பீடுகளையும் அவர்கள் அவர்கள் அவ மதிப்பதாக குற்றம் சாட்டினார்.

Previous articleஇந்தியாவின் முதல் நீருக்கு அடியில் செல்லும் ‘மெட்ரோ’ இன்று தொடக்கம்!!
Next articleதமிழை வழக்காடு மொழியாக பிறப்பிக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் தொடரும் உண்ணாவிரதம்!!