இந்தியா vs இங்கிலாந்து (IND vs ENG) முதல் ஒருநாள் தொடர் 2021!  இங்கிலாந்து டாஸ் வென்று ஃபில்டிங் -ஐ தேர்வு செய்தது!

0
105

இந்தியா vs இங்கிலாந்து (IND vs ENG) முதல் ஒருநாள் தொடர் 2021!  இங்கிலாந்து டாஸ் வென்று ஃபில்டிங் -ஐ தேர்வு செய்தது!

இந்தியா – இங்கிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று முதல் நடைபெற உள்ளது. ஏற்கனவே, டெஸ்ட் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து அணி, இந்திய அணியுடன் மோத காத்துக்கொண்டிருந்தது. பலம் வாய்ந்த இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற உள்ளது.

இன்று இந்தியா vs  இங்கிலாந்து (IND vs ENG)  ஒருநாள் தொடர்,  புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டுள்ளது.

இந்நிலையில் டாஸ் வென்றது இங்கிலாந்து அணி. முதலில் ஃபில்டிங் -ஐ தேர்வு செய்துள்ளது. இதன் படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இந்திய அணியில் ரோகித் ஷர்மா, விராட் கோலி, குள்தீப் யாதவ், தவான், ஷெரேயஸ் ஐயர், ஹர்திக் பாண்டிய, சர்டுள் டாகுள்,  கே. எல் ராகுல், புவனேஷ்வர் குமார், பிரசித்தி கிருஷ்ண மற்றும் கிருநல் பாண்டிய ஆகியோர் விளையாட உள்ளனர். முதல் ஆட்டம் ஆரம்பத்தில் ரோகித் ஷர்மா மற்றும் தாவன் பேட்டிங் செய்ய,இங்கிலாந்து அணியை சேர்ந்த எம். வூட் பவுலிங் செய்கிறார். இரண்டு ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 51 / 0 என்ற புள்ளிகளை பெற்றுள்ளது. ரோகித் ஷர்மா 37 க்கு 23  என்ற புள்ளிகளையும் தவான் 43 க்கு 27 புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.