ஏப்ரல் 1 முதல் இந்த வயதினருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி! சற்று முன் மத்திய அரசு அறிவிப்பு!

0
58
Coronavirus
Coronavirus

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக ஜனவரி மாதம் முதலே நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தயாரான கோவாக்ஸின், கோவிஷீல்டு என்ற இரு தடுப்பூசிகள் முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு செலுத்தப்பட்டது.

தற்போது 60 வயதுக்கும் மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் உச்சபட்சமாக ஒரே நாளில் 32 லட்சத்து 53 ஆயிரத்து 95 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டது. இதில் முதல் தவணையாக 29,03,030 டோஸ்களும், 2-வது தவணையாக 3,50,065 டோஸ்களும் நேற்று போடப்பட்டது. இதுவரை 4 கோடியே 84 லட்சத்து 94 ஆயிரத்து 594 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

இதுவரை முதல் டோஸ் தடுப்பூசி போட்டக்கொண்டவர்களுக்கு 28 நாட்கள் கழித்து 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இதில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு முதல் டோஸுக்கும் இரண்டாவது டோஸுக்கும் இடையே இருந்த வந்த 6-4 வார கால இடைவெளியை 4-8 வாரமாக மாற்ற அறிவுறுத்தி மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் நேற்று மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் ஏப்ரல் 1ம் தேதி தடுப்பூசி 45 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. எவ்வித இணை நோய் இல்லாதவர்களும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றின் தீவிரம் தடுக்கப்படும் என்பதால் இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

author avatar
CineDesk