வளர்ச்சி கண்டு வரும் நாடுகளுக்கு ஆதரவு அளிப்பதற்கு இந்தியா எப்பொழுதுமே தயங்கியது இல்லை. அந்த வகையில் ஐ.நா.சபை வளர்ச்சி பெறுவதற்காக இந்திய தூதரான டி.எஸ். திருமூர்த்தி அவர்கள் 115 கோடிக்கு காசோலையை ஜார்ஜ் செடீக்கிடம் வழங்கினார். இந்த காசோலையை அவர் தாமாகவே முன்வந்து வழங்கினார். இந்த நிதியில் காமன்வெல்த் நாடுகளுக்கும் பங்கிட்டு கொடுத்தார்.
ஜார்ஜ் செடீக் பேசும்போது இந்தியா தொடக்கத்தில் இருந்தே ஐ.நா. விற்கு ஆதரவகேவே இருந்துள்ளது. இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பு, அதன் பயனுள்ள திட்டங்களின் தொகுப்பை காட்டுகிறது. மேலும், அதன் கூட்டாண்மையானது உண்மையான தென்-தெற்கு ஒற்றுமை மற்றும் உலகின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சவால்களை எதிர்ப்பதில் இந்திய தலைமையின் நிரூபணத்தையும் காட்டுகிறது என்று கூறினார்.