லெபனானின் பெய்ரூட் குண்டு வெடிப்பு சம்பவம்: அதே போன்று சென்னையில் நடக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர் எச்சரிக்கை!

0
86

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுக கிடங்கில் நடந்த பெரும் வெடி விபத்து சம்பவம் பெரும் சேதங்களையும், இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. அதைப்போல் சென்னையிலும் நடக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

அதற்கு காரணம், அந்த துறைமுகத்தில் இருந்த 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் மருந்து தான் அப்பெரு வெடி விபத்து சம்பவத்திற்கு காரணமாக இருந்தது. இந்த வெடி விபத்தில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 4000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதில் பல லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்த துயரம் மிக்க வெடி விபத்திற்கு உலகில் உள்ள பெரும் தலைவர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

 

 

 

இந்த நிலையில், மருத்துவர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னை துறைமுகத்தை ஒட்டியுள்ள கிடங்கு ஒன்றில், 740 டன் அம்மோனியம் நைட்ரேட் ஐந்து ஆண்டுகளாகவே இருப்பு வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

 

மேலும், அதுதான் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்திற்கு காரணமாகும். ஆகவே, பெய்ரூட்டில் நடந்த விபத்தை போலவே சென்னையிலும் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும், எனவே அதனை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி அதனை உரம் தயாரித்தலுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” எனவும் மருத்துவர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.