எதிர்ப்பை மீறி நடக்கவிருக்கும் எதிர்கட்சிகள் கூட்டம்! முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்வாரா!!

0
75

எதிர்ப்பை மீறி நடக்கவிருக்கும் எதிர்கட்சிகள் கூட்டம்! முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்வாரா!!

 

பெங்களூருவில் நடத்தப்படும் எதிர்க்கட்சிக் கூட்டத்திற்கு தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படும் நிலையில் தமிழக முதல்வரின் எதிர்ப்பையும் மீறி எதிர்கட்சிகள் கூட்டம் பற்றி காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

 

தமிழகத்தில் மேகதாது பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. மேகதாதுவில் அணை கட்டும் முடிவை கைவிட வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அதிமுக கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான ஓ பன்னீர் செல்வம் அவர்கள் கர்நாடக அரசை கண்டித்து அறிக்கை விடுத்திருந்தார்.

 

இந்நிலையில் மேகதாது அணை பிரச்சனை எரிந்து வரும் நிலையில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முதல்வர் முக ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

இந்நிலையில் திட்டமிட்டபடி பெங்களூருவில் ஜூலை 17 மற்றும் 18ம் தேதிகளில் எதிர்கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால் அவர்கள் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

 

ஜூலை மாதம் 13 மற்றும் 14ம் தேதிகளில் கர்நாடகா மற்றும் பீகார் சட்டப் பேரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த எதிர்கட்சி கூட்டத்தில் மேகதாது பிரச்சனை தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொள்வாரா இல்லையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி எதிர்கட்சிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.