கொரோனா வைரஸ் பற்றி தற்போது உலக சுகாதார நிறுவனம் கூறும் தகவல்

0
124
உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 22 ஆயிரத்தை கடந்துள்ளது.
பல தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு அவை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சியில் பல நிறுவனங்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றன.  கூட்டு முயற்சி இல்லாமல் தனியாகவும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் அஸ்ட்ரா ஜெனாகா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. கிருமிப்பரவல் அதிகரிக்கும் வேகம் குறைந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தகவல்கள் கூறுகின்றன. இறந்தவர்களின் எண்ணிக்கை 12 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Previous articleமறைந்த நடிகர் முரளியின் மகனுக்கு திருமணம்! வரவேற்பு நிகழ்ச்சிக்கு வரவிருக்கும் இளையதளபதி!
Next article டுடே பங்கு சந்தை நிலவரம்!!