புதிய யுபிஐ பரிவர்த்தனை வசதி அறிமுகம்!! வங்கி வாடிக்கையாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி!!

0
123

புதிய யுபிஐ பரிவர்த்தனை வசதி அறிமுகம்!! வங்கி வாடிக்கையாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி!!

தற்போது அனைத்துமே டிஜிட்டல் மயமாக மாறி கொண்டு வருகிறது. நாமும் அதற்கேற்றவாறு மாடனாக மாறிக் கொண்டிருக்கிறோம். எனவே, பண பரிவர்த்தனை வசதிகளும் டிஜிட்டலாக மாறி யுபிஐ மூலம் நடந்து வருகிறது.

இந்த டிஜிட்டல் பண பரிமாற்றத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல எஸ் வங்கியானது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, ரூபே கிரெடிட் கார்டு மூலமாக யுபிஐ கட்டணம் செலுத்த வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, இனி வாடிக்கையாளர்கள் அனைவரும் எஸ் பேங்க் ரூபே கிரெடிட் கார்டு மூலம் தங்களது போன் பே மற்றும் கூகுள் பே ஆகியவற்றை இணைத்து கொள்ளலாம்.

இதனால் வாடிக்கையாளர்கள் கூடுதலான பாதுகாப்பு வசதிகளோடு கிரெடிட் கார்டை பயன்படுத்தி பண பரிமாற்றத்தை செய்து கொள்ளலாம். இந்த புதிய வசதியால் கிரெடிட் கார்டிற்கான கால அம்சத்தை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

சிலர் ரூபே கார்டு இல்லாத எஸ் வங்கியின் கிரெடிட் கார்டு வாடிக்கையாளராக இருப்பார்கள். அவ்வாறு இருப்பவர்கள் அனைவரும் உடனடியாக விர்ச்சுவல் எஸ் வங்கியின் ரூபே கிரெடிட் கார்டை வாங்கி கொள்ளலாம்.

அதன் பிறகு தங்களது போன் பே மற்றும் கூகுல் பே யுபிஐ செயளிகளோடு இணைத்துக் கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே, இந்த யுபிஐ வசதி வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கொண்டு வரப்பட்டுள்ளது என்று எஸ் வங்கி தெரிவித்துள்ளது.

Previous articleதெலுங்கானா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை… அபாய அளவை தாண்டி பாயும் கோதாவரி ஆறு!!
Next articleஜெயிலர் திரைப்படம் உங்களை ஏமாற்றாது… நடிகர் வசந்த் ரவி பேட்டி!!