சென்னையில் நடக்கவிருக்கும் ஐபிஎல் லீக் துவக்க விழா – சிஎஸ்கே அணிக்கு அஸ்வின் வைத்த கோரிக்கை!!

0
287
#image_title

சென்னையில் நடக்கவிருக்கும் ஐபிஎல் லீக் துவக்க விழா – சிஎஸ்கே அணிக்கு அஸ்வின் வைத்த கோரிக்கை!!

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் வரும் 22ம் தேதி துவங்கவுள்ளது. இந்த தொடரின் முதல் லீக் போட்டியும், துவக்க விழாவும் சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை இன்று துவங்கிய நிலையில், இதற்கு பெரும் மவுசு ஏற்பட்டு அனைத்து டிக்கெட்டுகளும் காலியாகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த முதல் போட்டியானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் பெங்களூர் ராயல் ரேஞ்சர்ஸ் அணிக்கும் இடையே நடக்கவுள்ளது. சென்னை சேப்பாக்க மைதானத்தில் கடைசியாக மகேந்திர தோனி மற்றும் கோலி விளையாடுவதை பார்க்கும் ஆவல் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்ட காரணத்தினால் இப்போட்டிக்கான மவுசு கூடியுள்ளது.

இது மட்டுமின்றி இதன் துவக்க விழாவும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தினால் நடக்கவுள்ளது. இதுவும் இப்போட்டி மீதான ஆர்வம் கூட ஓர் காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த துவக்க விழாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், நடிகர்கள் டைகர் ஷெராப், அக்க்ஷைய் குமார், சோனு நிகம் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளார்களாம். இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் நேரடிகள் விற்பனை இல்லை, பேடிஎம், சிஎஸ்கே அணி இணையதளம் உள்ளிட்டவைகளில் இதற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை நடந்தது. சிஎஸ்கே இணையத்தளத்தில் விற்பனை துவங்கி வெறும் 10 நிமிடங்களில் டிக்கெட்கள் விற்று தீர்ந்துள்ளது. பேடிஎம் பக்கத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 12 மணிக்கு தான் விற்பனை துவங்கியது. அந்த இணையத்தளத்தில் சுமார் 18 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனைக்கு வந்ததால் பலருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.

அவர்களுள் இந்தியணி கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினும் ஒருவர். அவருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்பதை தெரிவித்துள்ள அவர் தனது எக்ஸ் பக்கத்தில் ஓர் பதிவிட்டுள்ளார். அதில் அவர், தனது மகள்கள் இருவரும் சேப்பாக்கத்தில் நடக்கவுள்ள துவக்கவிழா மற்றும் போட்டியினை காண விரும்புகிறார்கள். இதற்கு சென்னை அணி நிர்வாகம் எனக்கு உதவி செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்துள்ளார். இவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Previous articleஅதிமுக கட்சி கொடி, சின்னம் உள்ளிட்ட அடையாளங்களை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!!
Next articleஎல்லை தாண்டி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் மீதான வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் பலி!!