எல்லை தாண்டி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் மீதான வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் பலி!!

0
170
#image_title

எல்லை தாண்டி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் மீதான வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் பலி!!

பாகிஸ்தான் நாட்டின் வடக்கு வஜிரிஸ்தானின் பழங்குடியினர் வாழும் மாவட்டத்தில் பாதுகாப்பு சோதனைச்சாவடி ஒன்று உள்ளது. அந்த பகுதி ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ளது. அந்த இடத்தில் நேற்று முன்தினம் தாக்குதல் நடந்துள்ளது. இதில் 7வீரர்கள் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு ஹபீஸ் குல் பஹதர் என்னும் அமைப்பினர் பொறுப்பேற்றது என்று தெரிகிறது. எனினும், இந்த அமைப்பினர் நடத்திய தாக்குதல் ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் இருந்து நடத்தப்பட்டது என்று பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் தெரிவித்த நிலையில், பதில் தாக்குதல் நிச்சயம் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் அதிபர் நேற்று சூளுரைத்திருந்தார்.

இதன்படி, ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான் அமைப்பினர், பாகிஸ்தான் இன்று அதிகாலை ஆப்கானிஸ்தான் பகுதியில் எல்லை தாண்டி வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர். கோஸ்ட், பாக்திகா உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதில் 3 குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் பலியாகியுள்ளனர். ஆனால் இதுவரை இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் நாட்டின் தரப்பினர் எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், இந்த ஆப்கானிஸ்தான் அரசின் செய்தி தொடர்பாளர், பாகிஸ்தான் தனது வன்முறை செயல்கள் மற்றும் பிரச்சனைகளை கட்டுப்படுத்த தவறியதற்கு ஆப்கானிஸ்தானை குற்றஞ்சாட்டுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி பேசியுள்ளார். மேலும், இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் அரசு தனது தீவிர கண்டனத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.