அதிமுக கட்சி கொடி, சின்னம் உள்ளிட்ட அடையாளங்களை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!!

0
147
#image_title

அதிமுக கட்சி கொடி, சின்னம் உள்ளிட்ட அடையாளங்களை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!!

அதிமுக கட்சி இரு தலைமையில் செயல்பட்டு வந்த நிலையில், அண்மையில் அதில் விரிசல் ஏற்பட்டு ஓபிஎஸ் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். எனினும், ஓபிஎஸ் ஆதரவாளர்களும், ஓ.பன்னீர்செல்வமும் தொடர்ந்து அதிமுக கட்சி கொடி, சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவைகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், இவர்களின் இந்த செயல்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்துகிறது, எனவே கட்சி கொடி உள்ளிட்ட அடையாளங்களை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவானது நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட நிலையில், இடைக்கால தடையினை ஓபிஎஸ் தரப்பிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனை தொடர்ந்து, இந்த மனு மீதான விசாரணைகள் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டு வந்த நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவுற்றது. இவ்வழக்கின் மீதான உத்தரவு பிறப்பிக்கும் தேதியினை குறிப்பிடாமல் நீதிபதிகள் தீர்ப்பினை ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பானது இன்று வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்துள்ளது. அத்தீர்ப்பின்படி, அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் உள்ளிட்டவைகளை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையானது நிரந்தர தடையாக விதிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கட்சியின் சார்பாக தான் தேர்தலில் போட்டியிடுவேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறிவந்த நிலையில், நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு அவருக்கு பெரும் பின்னடைவினை ஏற்படுத்தியுள்ளது.