இரும்புச்சத்து நிறைந்த “உளுந்து பாயசம்” – சுவையாக செய்வது எப்படி?

0
32
#image_title

இரும்புச்சத்து நிறைந்த “உளுந்து பாயசம்” – சுவையாக செய்வது எப்படி?

நமக்கு மிகவும் பிடித்த அறுசுவை உணவுகளில் ஒன்று இனிப்பு.இதில் பல்வேறு உணவு வகைகள் இருக்கிறது.இந்த இனிப்பு வகைகளில் ஒன்று பாயசம்.இதில் பால் பாயசம்,ஜவ்வரிசி பாயசம்,பாசிப்பயறு பாயசம்,அரிசி பாயசம்,அவல் பாயசம் என்று பல வகைகள் இருக்கிறது.அதில் ஒன்று தான் இந்த உளுந்து பாயசம்.

உளுந்தை உணவில் சேர்த்து கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.நம் முன்னோர்களின் உணவு முறையில் உளுந்துக்கு எப்பொழுதும் தனி இடம் உண்டு.இந்நிலையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உளுந்தில் பாயசம் செய்து குடித்து வந்தோம் என்றால் மூட்டு வலி,இடுப்பு வலி,பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை,எலும்பு சம்மந்தமான பாதிப்புகள் நீங்கி உடல் மிகவும் வலிமையாக காணப்படும்.

தேவையான பொருட்கள்:-

*உளுந்து பருப்பு – 150 கிராம்

*பச்சரிசி – 2 தேக்கரண்டி

*தேங்காய் பால் – 1 லிட்டர்

*சர்க்கரை – 400 கிராம்

*உப்பு – 1 தேக்கரண்டி

*ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி

*முந்திரி – 5

*திராட்சை – 8

*பாதாம் – 5

*நெய் – 1 1/2 தேக்கரண்டி

செய்முறை:-

பாத்திரம் எடுத்து அதில் 150 கிராம் உளுந்து பருப்பு மற்றும் 2 தேக்கரண்டி பச்சரிசி சேர்த்து தண்ணீர் ஊற்றி 2 அல்லது 3 முறை அலசிக்கொள்ளவும்.அவற்றை 2 மணி நேரம் தண்ணீர் ஊற விடவும்.பின்னர் மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்து கொள்ளவும்.

அடுத்து முந்திரி,பாதம் பருப்பு எடுத்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.பின்னர் 1 லிட்டர் தேங்காய் பால் நறுக்கி வைத்துள்ள பருப்புகளை சேர்க்கவும்.

அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் அரைத்து வைத்துள்ள உளுந்து கலவையை சேர்க்கவும்.அடுத்து தேங்காய் பால் கலவையை ஊற்றிக்கொள்ளவும்.அதில் 1 தேக்கரண்டி உப்பு சேர்த்து கொள்ளவும்.

பின்னர் உளுந்து + தேங்காய் பால் கலவை கெட்டியாகத் தொடங்கும்.அப்பொழுது 300 மில்லி அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.மிதமான தீயில் வைத்து 20 நிமிடங்கள் வரை நன்கு கொதிக்க விடவும்.உளுந்து அடிபிடிக்கும் தன்மை கொண்டவை என்பதால் அவ்வப்போது அதனை கிண்டி விட வேண்டும்.

20 நிமிடங்களுக்கு பிறகு 400 கிராம் சர்க்கரை மற்றும் 1//2 தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிண்டவும்.

மற்றொரு அடுப்பில் கடாய் வைத்து 1 1/2 தேக்கரண்டி நெய் ஊற்றவும்.அவை சூடேறியதும் அதில் முந்திரி,உலர் திராட்சை சேர்த்து வறுக்கவும்.பின்னர் இதை கொதிக்கும் உளுந்து பாயசத்தில் சேர்த்து கிண்டவும்.பின்னர் அடுப்பை அணைக்கவும்.