மும்பை அணியில் விளையாட போகிறாரா அர்ஜுன் டெண்டுல்கர்

Photo of author

By Parthipan K

இந்தியாவில் கடந்த 2008 முதல் கோடை விடுமுறையில் ஐ.பி.எல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டிக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் பெரிய அளவில் உள்ளது. ஆனால் இந்த முறை ஐ.பி.எல் தொடரை இந்தியாவில் நடத்த முடியாது சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இந்த தொடர் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெற இருக்கிறது. இதற்காக எட்டு அணி வீரர்களும் துபாய்க்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் முதல் போட்டியில் சென்னையும், மும்பையும் மோத இருந்தன.

ஆனால் சென்னை அணியில் பயிற்சியாளர் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரிய வந்ததால் சென்னைக்கும், மும்பைக்கும் போட்டி நடைபெறுமா என குழப்பம் நீடித்து வந்ததது. தற்போது அனைத்து வீரர்களுக்கும் கொரோனா சரியான நிலையில் முதல் போட்டி சென்னைக்கும், மும்பைக்கும் என தீர்மானிக்கப்பட்டது. இந்திய அணியின் ஜாம்பவான் மற்றும் முன்னாள் மும்பை அணியின் கேப்டனுமான சச்சின் டெண்டுல்கர் தனது மகனான அர்ஜுன் டெண்டுல்கர் வருங்காலத்தில் மும்பை அணிக்காக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.