எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையா? ஒரு கைப்பிடி கருவேப்பிலை!

எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையா? ஒரு கைப்பிடி கருவேப்பிலை!

எலும்புகள் பலம் பெற எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகளை இந்த பதிவின் மூலமாக காணலாம்.நம் தினசரி எடுத்துக் கொள்ளும் உணவுகளில் இருந்து நம் உடலுக்கு சரியான சத்துக்கள் கிடைக்காத காரணத்தினால் நம் உடலில் உள்ள எலும்புகளின் பலம் குறைந்து எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது. கை கால் வலி, மூட்டு வலி, பலவீனமான எலும்புகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

இதனை முற்றிலும் தவிர்க்க நம் தினசரி எந்த வகையான உணவுகளை சாப்பிட வேண்டும். நாம் தினசரி எடுத்துக் கொள்ளும் உணவுகளுடன் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகளை பற்றி இந்த பதிவு மூலமாக காணலாம்.

எலும்புகளுக்கு தேவையான கால்சியம் சத்துக்கள் சரிவர கிடைக்காத காரணத்தினால் எலும்புகள் வலுவிலந்து எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது.

கால்சியம் சத்து அதிகம் நிறைந்த உணவு வகையான முருங்கைக் கீரையில் அதிகப்படியாக நிறைந்துள்ளது. தினசரி எடுத்துக் கொள்ளும் உணவுகளுடன் முருங்கைக் கீரையினை பொரியல் செய்து சாப்பிட்டு வருவதன் காரணமாக எலும்புகள் பலம் பெறும். நம் தினசரி செய்யக்கூடிய உணவில் கறிவேப்பிலை சாப்பிட வேண்டும். இதில் அதிகப்படியான கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. கறிவேப்பிலைகளை துவையலாக செய்து சரி நாம் சாப்பிடும் உணவுகளுடன் சேர்த்து வருவதன் காரணமாக எலும்புகள் வலுவடைய உதவுகிறது.

பாகற்காய் முட்டை கோஸ் போன்ற காய்கறி வகைகளை தினசரி உணவுகளுடன் சேர்த்துக் கொள்வது எலும்புகளுக்கு பலம் அதிகரிக்க உதவுகிறது. பல வகைகளான ஆரஞ்சு பழத்தின் கால்சியம் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. வைட்டமின் இதை நம் உடம்பில் உள்ள அனைத்து வகையான எலும்புகளுக்கும் பலம் பெறுவதற்கு உதவுகிறது.

Leave a Comment