இந்த combination – ல் சாப்பிட்டா உயிருக்கே ஆபத்தா? ஒருபோதும் இந்த தவறை செய்யாதீங்க! மருத்துவர் விடுத்த எச்சரிக்கை! 

0
237
#image_title

இந்த combination – ல் சாப்பிட்டா உயிருக்கே ஆபத்தா? ஒருபோதும் இந்த தவறை செய்யாதீங்க! மருத்துவர் விடுத்த எச்சரிக்கை! 

சாதாரணமாக நாம் உண்ணும் உணவை நமது இரப்பையில் இருக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் ஜீரணிக்க உதவுகிறது. இது ஹைப்பர் அசிடிட்டியாக இருக்கும் பொழுது நமக்கு உடலுக்கு கேடு. அதனால் நாம் ஹெவியான உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது எலுமிச்சை சாறு சேர்ப்பது நல்லது.

*** பொதுவாக தேவைக்கு அதிகமான உணவை எடுத்துக் கொள்ளும் போது பால் சார்ந்த பொருட்களை தவிர்ப்பது நல்லது. நான்வெஜ் சாப்பிட்டாலும் அல்லது எண்ணெயில் பொரித்த பதார்த்தங்களை சாப்பிட்டாலும் பால் பொருட்களை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் பால் நமது இரப்பையில் உள்ள ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை சமநிலைப்படுத்தி விடும் இதனால் ஜீரண சக்தி குறையும். ஆனால் சாப்பிட்டு முடித்ததும் தயிர் சாப்பிடலாம். அது ஜீரணத்திற்கு உதவும்.

*** அதேபோல் முட்டையை முழுதாக வேக வைக்காமல் அரைவேக்காட்டில் சாப்பிடுவது. அதாவது ஆப்பாயில், கலக்கி போன்றவை. ஏனெனில் முட்டையில் சால்மென்னாலோஸ் என்ற கிருமி உள்ளது. இது டைபாய்டு வர வைக்கக்கூடியது. எனவே முழுதாக வேக வைத்த முட்டையை சாப்பிடுவது தான் உடல் நலத்திற்கு நல்லது.

** அடுத்ததாக கீரை உணவுகளில் அதிகமாக இன்ஃபெக்சன் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். கீரையை நன்கு சுத்தம் செய்து பின்னர் நன்றாக கொதிக்க வைத்து வேகவிட்டு சமைக்க வேண்டும்.  கீரையை சமைத்த உடன் 6 மணி நேரத்திற்குள் சாப்பிடுவது நல்லது இல்லையெனில் அதில் நொதித்தல் நடைபெற்று ஃபுட் பாய்சன் ஆகிவிடும்.

** அடுத்ததாக கருவாடு மற்றும் மீன் ஆகியன ஃபுட் பாய்சனை ஏற்படுத்தும். கருவாட்டினை நன்கு கொதிக்கின்ற நீரில் சுத்தம் செய்து பின்னர் பயன்படுத்த வேண்டும். அதேபோல் மீனையும் நன்கு கழுவி நன்கு கொதிக்கும் குழம்பில் போட்டு நன்றாக வெந்தவுடன் சாப்பிட வேண்டும்.

** தேங்காய் சேர்த்த பொருட்கள் 8 மணி நேரத்திற்கு பின்னர் சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்படும். அதேபோல் ஃப்ரிட்ஜில் வைத்த உணவுகளை நன்கு ஹீட் செய்த பின்னர் சாப்பிடுவது நல்லது.

** அதேபோல் பாலில் எந்தவித பொருட்களை மிக்ஸ் செய்தாலும் அதை ஃபுட் பாய்சனை ஏற்படுத்தும். உடல் எடை மற்றும் வயதை பொருத்து சாப்பிடும் சாப்பாட்டின் அளவும் இருக்க வேண்டும்.  ஒல்லியாக இருப்பவர்கள் உடல் எடை அதிகரித்தால் அதற்கு ஏற்றார் போல் உணவு முறையை மாற்ற வேண்டும்.

** எப்போதும் உடலுக்கு 65%  கார்போஹைட்ரேட், 25 % புரோட்டின், 10% கொழுப்பு, கலந்து எப்போதும் சாப்பிட வேண்டும்.

Previous articleரயில்வே நிர்வாகத்தின் மாஸ் அறிவிப்பு!! இவர்களுக்கு மட்டும் 50% கட்டணம் தள்ளுபடி!!
Next articleபல ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்த Diclofenac மாத்திரை!! இன்றளவும் விற்பனை?