அப்பாவுக்குஉதட்டில் முத்தம் கொடுத்தால் தப்பா? முத்த சர்ச்சை குறித்து பேசிய இந்திரஜா சங்கர்!

0
181
#image_title

அப்பாவுக்குஉதட்டில் முத்தம் கொடுத்தால் தப்பா? முத்த சர்ச்சை குறித்து பேசிய இந்திரஜா சங்கர்!

பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவிற்கு கார்த்திக் என்பவருடன் சமீபத்தில் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண விழாவில் ஏராளமான திரைபிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி இருந்தனர். இவர்களின் திருமண கொண்டாட்டத்தை தனியார் யூடியூப் சேனல் ஒன்று பிரத்யேகமாக ஒளிபரப்பும் செய்தது.

இதற்கிடையில் இந்திரஜா மற்றும் அவரின் கணவர் கார்த்தி இருவரு உதட்டு முத்த சர்ச்சையில் சிக்கினார்கள். அதாவது திருமண கொண்டாட்டத்தில் நடனமாடும்போது கார்த்தி அவரின் மாமியாரான இந்திரஜாவின் அம்மாவிற்கு உதட்டு முத்தம் கொடுத்திருந்தார். அதேபோல இந்திரஜா அவரின் அப்பா ரோபோ சங்கருக்கு உதட்டு முத்தம் கொடுத்திருந்தார்.

இதனை கண்ட பலரும் பல்வேறு விதமாக விமர்சிக்க தொடங்கினார்கள். இந்நிலையில் தற்போது இந்திரஜா அதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதன்படி அவர் கூறியிருப்பதாவது, “என் அப்பாவுக்கு நான் முத்தம் கொடுத்த போட்டோவை பார்த்த பலரும் அப்பாவுக்கு யாராவது இப்படி முத்தம் தருவார்களா? என்று என்னை விமர்சித்தார்கள். அவர் என் அப்பா நான் அவரின் மகள்.

அதில் என்ன தவறு இருக்கிறது. நான் சிறுவயதில் இருந்தே இப்படி தான் முத்தம் கொடுத்து என் அப்பாவுடன் விளையாடி வருகிறேன். நான் வளர்ந்து விட்டேன் என்பதற்காக அவருக்கு மகள் இல்லை என்றாகி விடுமா? உண்மையில் நான் முத்தம் கொடுத்ததில் தவறு இல்லை. அதை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தவர்களின் கண்களில் தான் தவறு உள்ளது. எனவே நான் தவறானவளோ அல்லது என்னை என் அம்மா அப்பா தவறாகவோ வளர்க்கவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார்.