இந்த அறிகுறி இருந்தாலும் கொரோனாதான்?

Photo of author

By Parthipan K

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. இந்த நிலையில் ஜலதோஷத்துக்கு மருந்து சாப்பிட்டாலும், மருந்து சாப்பிடாவிட்டாலும் நம் உடலில் உள்ள இயற்கையான நோய் எதிர்ப்புச்சக்தி காரணமாக எப்படியும் ஒரு வாரத்தில் ஜலதோஷம் நம்மிடம் இருந்து விடைபெறும். இது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகிறபோது, மூளையும் மத்திய நரம்பு மண்டலமும் பாதிப்புக்குள்ளாகின்றன என்று கூறப்படுவதற்கு பலம் சேர்ப்பதாக அமைந்திருக்கிறதாம்.

விஞ்ஞானிகளில் ஒருவரான காரல் பில்போட் பேசும்போது கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் முக்கிய அடையாளம், வாசனை மற்றும் சுவை இழப்பு ஆகும். இருப்பினும் இது மோசமான ஜலதோஷம் இருப்பதற்கான பொதுவான அறிகுறியும் ஆகும். கொரோனா மற்றும் சாதாரண ஜலதேஷம் இவ்விரண்டுக்கும் உள்ள வாசனை, சுவை இழப்புக்கு இடையேயுள்ள வித்தியாசத்தை கண்டறிவதுதான் எங்கள் ஆய்வின் நோக்கமாக அமைந்தது” என்கிறார்.