மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டபொம்மன் பெயரா? மத்திய அரசின் புதிய அறிவிப்பு?
அதிமுக ஆட்சியில் இருந்தபோது பட்ஜெட் கூட்டத்தொடரில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பட்ஜெட் ஒதுக்கினர். 2014 ஆம் ஆண்டு பட்ஜெட் ஒதுக்கப்பட்டு மூன்றாண்டுகள் கழித்து 2019 ஆம் ஆண்டு பிரதமர் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். அவ்வாறு அடிக்கல் நாட்டியும் மருத்துவமனை முழுவதுமாக கட்டி முடியவில்லை.
தற்பொழுது ஆட்சி மாறிய சூழலில் ஜப்பான் நிறுவனம்1500 கோடி நிதி ஒதுக்கி இருப்பதாக மதுரை எம் பி வெங்கடேசன் சில மாதங்களுக்கு முன்பு கூறினார். இவ்வாறு இருக்கும் சூழலில் மதுரையில் தொடங்க இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் மீதமுள்ள 23 மருத்துவமனைகளின் பெயர்களை மத்திய அரசு மாற்றி அமைப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை என்ற பெயரை மாற்றி சுதந்திரப் போராட்டத்திற்காக போராடிய வீரர்களின் பெயர்களை வைப்பதாக தெரிவித்துள்ளனர். வரலாற்று நினைவுச் சின்னங்கள் மற்றும் தியாகிகள் ,உள்ளூர் போராட்ட வீரர்கள் ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் இருந்து நான்கு பெயர்களை பரிந்துரைக்கலாம் என தெரிவித்துள்ளனர். அவ்வாறு பரிந்துரை அடிப்படையில் வைக்கப்படும் பெயர்கள் ஏன் வைக்க வேண்டும் என்ற காரணங்களையும் தெளிவாக கூற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
தற்போது உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மட்டுமின்றி கட்டுமான பணியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் இந்தப் பெயர் மாற்றம் அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளனர். அந்த வகையில் நமது தமிழ்நாட்டில் இருந்து இந்திய விடுதலைக்காக போராடிய மருதநாயகம் ,வேலு நாச்சியார் ,வீரபாண்டிய கட்டபொம்மன், மருதுபாண்டியர் ,வாஞ்சிநாதன் திருப்பூர் குமரன், பாரதியார் உள்ளிட்டர் பெயர்கள் பரிந்துரைக்கப்படலாம்.