பிரதமர் மோடிக்கு பயமா ? அண்ணாமலை, வானதி சீனிவாசன் அதிரடி !
தமிழகத்தில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது பிறந்த நாளை ஒட்டி தொண்டர்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரதமர் மோடியின் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது என குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடிக்கு பயம்மில்லை எனவும், இனியும் மக்களை ஏமாற்ற முடியாது என்பதை உணர்ந்த திமுகவிற்கு தான் பயம் எனவும் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட பல்வேறு நல்ல திட்டங்களை தங்களின் சுயநலத்திற்காக தமிழகத்திற்குள் அனுமதிக்காமல் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை திராவிட கட்சிகள் சூறையாடி கொண்டிருப்பதாகவும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
மேலும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், பல்லடம் நெல்லை பொதுக்கூட்டத்தில் திரண்ட கூட்டம் முதல்வர் ஸ்டாலினை பவித்திரமடையச் செய்துள்ளது. அதனால்தான் தனது பிறந்த நாளை ஒட்டி தொண்டர்களுக்கு எழுதிய அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் புழம்பி தீர்த்திருக்கிறார். பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்திற்கு வருவதால் ஸ்டாலினுக்கு தான் தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு தோல்வி பயமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.