முகம் கருமையாக இருக்கின்றதா? வெள்ளையாக பளபளப்பாக மாற்ற நான்கு எளிமையான டிப்ஸ் இதோ!!

0
272
#image_title

முகம் கருமையாக இருக்கின்றதா? வெள்ளையாக பளபளப்பாக மாற்ற நான்கு எளிமையான டிப்ஸ் இதோ!!

நம்மில் சிலருக்கு முகத்தில் மட்டும் கருமையான நிறம் இருக்கும். அந்த கருமையை நீக்குவதற்கு எளிமையாக கிடைக்க கூடிய சில பக்கங்களை வைத்து நான்கு வைத்திய முறைகள் எவ்வாறு செய்வது என்பது பற்றி பார்க்கலாம்.

நம்மில் சிலர் அதிக நேரம் வெளியில் வேலை காரணமாக வெயிலில் சென்று வருவோம். இதனால் முகம் கருமையாக மாறும். ஒரு சிலர் தவறான சில மேக்கப் பொருட்களை முகத்திற்கு பயன்படுத்துவார்கள். இதன் மூலமாகவும் முகம் கருமை பெறும். ஒரு சிலர் அதிக நேரம் தொலைக்காட்சி, மொபைல், லேப்டாப் போன்ற சாதனங்களை பயன்படுத்துவார்கள். அப்பொழுது அதன் வெளிச்சம் முகத்தில் பட்டு கூட முகம் கருமையாக மாறும்.

இவ்வாறு கருமையாக இருக்கும் முகத்தின் நிறத்தை மாற்றுவதற்கு பலரும் சிகிச்சை முறைகள், கிரீம்கள், ஃபேஸ் வாஸ், மாத்திரைகள் என பலவும் பயன்படுத்துவார்கள். இதன் முடிவு என்பது குறைவு தான். இந்த பதிவில் கூறப்பட்டுள்ள இந்த மூன்று டிப்ஸ் முகத்தில் உள்ள கருமையான நிறத்தை போக்கி முகத்தை வெள்ளையாக மற்றும் பளபளப்பாக மாற்ற உதவும்.

டிப்ஸ் 1…

முதலில் வெள்ளரிக்காயை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் அதை தட்டி அதிலிருந்து வெள்ளரி சாறு எடுத்துக் கொள்ளவும். இதை முகம் முழுவதும் தேய்த்து பின்னர் கழுவி வர முகம் கருமையான நிலத்திலிருந்து மாறி பளபளப்பாக மாறும்.

டிப்ஸ் 2…

எலுமிச்சம் பழத்தில் இருந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் சிறிதளவு தேன் சேர்த்து நன்கு கலந்து அதை முகத்தில் தேய்த்துக் கொள்ளவும். 30 நிமிடங்கள் கழிந்து இதை கழுவினால் முகம் கருமையான நிறத்தில் இருந்து மாறும். மேலும் முகம் பளபளப்பான தோற்றத்தை பெறும்.

டிப்ஸ் 3…

பப்பாளி பழத்தை எடுத்துக் கொள்ளவும். தோலை நீக்கி விட்டு பப்பாளி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் இதில் சிறிதளவு தேன் சேர்த்து நன்கு கலந்து விட்டு பின்னர் இதை முகத்தில் தேய்த்து கழுவி வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.

டிப்ஸ் 4…

சிறிது தயிர் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் தக்காளியை தோல் நீக்கி சேர்த்து பேஸ்ட் போல தயார் செய்து இந்த பேஸ்ட்டை முகத்தில் தேய்த்து 20 நிமிடங்கள் கழிந்து கழுவினால் கருமையான முகம் வெண்மையாக மாறி பளபளப்பாக மாறும்.