வீட்டில் ஒரே பல்லி தொல்லையா இருக்கா? அதை ஈஸியாக விரட்டி விடலாம்!

Photo of author

By Divya

வீட்டில் ஒரே பல்லி தொல்லையா இருக்கா? அதை ஈஸியாக விரட்டி விடலாம்!

உங்களது வீட்டிற்கு அழையா விருந்தாளியாக வந்து அட்டகாசம் செய்யும் பல்லிகளை விரட்ட ஈஸியான வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பல்லி என்றால் பலரும் அஞ்சுவர். பல்லி மேலே விழுந்தால் நல்லது அல்ல என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது. எவ்வளவு முயன்றும் இந்த பல்லிகளை விரட்டுவதில் தோல்வி கண்டவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ட்ரிக்ஸை பயன்படுத்தி எளிதில் விரட்டி விடலாம்.

வெங்காயம்
பூண்டு

இந்த இரண்டு பொருட்களையும் சம அளவு எடுத்து அரைத்துக் கொள்ளவும். கிளாஸ் அளவு நீரில் சேர்த்து வீட்டில் பல்லி நடமாட்டம் உள்ள இடத்தில் தெளித்தால் அதன் தொல்லை நீங்கும்.

பெப்பர் தூள்

கருப்பு மிளகை பொடி செய்து பல்லி நடமாட்டம் இருக்கும் இடத்தில் தூவி விட்டால் அதன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

முட்டை தூள்
காபி தூள்

முட்டையில் ஓடுகளை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு சுத்து விட்டு எடுத்துக் கொள்ளவும். அடுத்து அதில் காபி தூள் கலந்து கொள்ளவும். இதை பல்லி நடமாட்டம் உள்ள இடத்தில் தூவி விட்டால் அவைகள் வீட்டை விட்டு ஓடிவிடும்.