போதைப்பொருள் கடத்தலுக்கு துணைபோகும் ஆளுங்கட்சி? – விளக்கம் கேட்கும் எதிர்கட்சி தலைவர்!!

Photo of author

By Savitha

போதைப்பொருள் கடத்தலுக்கு துணைபோகும் ஆளுங்கட்சி? – விளக்கம் கேட்கும் எதிர்கட்சி தலைவர்!!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார் தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி.

தமிழகத்தில் கடந்த சில காலங்களாக போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது இதனால் தமிழக இளைஞர்களின் எதிரகாலம் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நிம்மதியும் கேள்விக்குறி ஆகியுள்ளது.

எனவே அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம் மற்றும் கடந்த சில தினங்களில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் விவரம் பற்றிய பட்டியலை ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் வழங்கினார் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி.

மேலும், 20 க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் திமுக முன்னால் உறுப்பினராக இருந்த நிலையில் எவ்வாறு அவர் திமுக முக்கிய பிரமுகராக மாறினார், மேலும் போதைப்பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தை ஜாபர் சாதிக் திமுக கட்சிக்கு நிதியாக வழங்கினாரா, தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் புழக்கம் ஆளும் திமுக கட்சியின் துணையுடன் தான் நடக்கிறதா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை பொதுமக்களிடம் எழுப்பியுள்ளது எனவே இவற்றிற்கு திமுக கட்சியும் முதல்வரும் முறையான விளக்கமளிக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி சர்வதேச அளவிளான போதைப் பொருட்கள் கடத்தும் கும்பலுடன் தொடர்புடையவர்கள் தமிழகததில் இருப்பதாக வெளியான தகவலையடுத்து விரைவில் அவர்களை கண்டுபிடுத்து கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என புகார் மனு அளித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.