வெளியாகாத திரைப்படத்தின் பாடல் மட்டும் ட்ரெண்டானதா ? – மக்கள் நாயகன் ராமராஜன் நடிக்க துவங்கி வெளியாகாத திரைப்படங்கள், ஓர் அலசல்!

0
210
#image_title

வெளியாகாத திரைப்படத்தின் பாடல் மட்டும் ட்ரெண்டானதா ? – மக்கள் நாயகன் ராமராஜன் நடிக்க துவங்கி வெளியாகாத திரைப்படங்கள், ஓர் அலசல்!

1977ம் ஆண்டில் சினிமாவுலகில் நுழைந்தார் நடிகர் ராமராஜன். இவர் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்ததோடு, உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். ஒரு காலகட்டத்திற்கு பிறகு நாயகனாக இவர் நடித்த முதல் திரைப்படமான ‘நம்ம ஊரு நாயகன்’ என்னும் திரைப்படம் 1988ல் வெளியானது. அதனை தொடர்ந்து ‘கரகாட்டக்காரன்’ திரைப்படம் 1989ல் வெளியாகி பெருமளவில் வெற்றியினை கண்டது. அதனை தொடர்ந்து, கிராமத்தினை பின்னணியாக கொண்டு எடுக்கும் திரைப்படங்களை தேர்வு செய்து இவர் நடிக்க துவங்கினார். அனைத்து படங்களும் வெற்றியடைய துவங்கிய நிலையில் ‘மக்கள் நாயகன்’ என்னும் பட்டத்தையும் இவர் பெற்றார்.

80-90களில் கொடிகட்டி பறந்த நாயகன், ராமராஜன்

ராமராஜன் தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்த காலம் அது. அவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட். எனினும் அவர் நடித்த சில படங்கள் வெளியாகாமல் போனது. காவலன், தங்கநிலா, ராமர் படை, வேலா, தர்மன், நீ ஒரு தனி பிறவி, வள்ளல் மகன், கும்பாபிஷேகம், மதுரை தங்கம், பெத்தவ மனசு, காங்கேயன் காளை, கண்ணுபட போகுது, சத்திய தாய், பல்லவன் பாண்டியன், கூவுங்கள் சேவல்களே, நம்ம ஊரு சோழவந்தான், மண்ணுக்கேத்த மைந்தன், நான் உங்கள் பக்கம் உள்ளிட்ட படங்கள் இவர் கமிட்டான திரைப்படங்கள் ஆகும்.

இவற்றுள் சில திரைப்படங்கள் அறிவித்தவுடனே நின்று போனதாகும். மற்றும் சில திரைப்படங்கள் படப்பிடிப்பு துவங்கி சில காட்சிகள் படமாக்கப்பட்ட பின்னர் நின்று போனதாகும். இதில் ‘காவலன்’ என்னும் திரைப்படத்தில் ராமராஜன் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தார். இதிலிருந்து ‘வைக்கிறேன் வைக்கிறேன்னு சொல்லிட்டு வைக்காம தான் போறீங்களே’ என்னும் பாடல் ஒன்று வெளியானது. இரட்டை அர்த்தம் கொண்ட ஆபாச பாடலான இது அன்றைய இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இப்பாடல் செம ட்ரெண்டான நிலையில், இப்படம் காரணம் ஏதும் கூறாமல் பாதிலேயே நின்று போனது.

இதே போல் ‘மண்ணுக்கேத்த மைந்தன்’ என்னும் திரைப்படத்தில் இருந்தும் 8 பாடல்கள் வெளியானது. இன்று வரை அந்த பாடல்களை நம்மால் யூ-ட்யூபில் கேட்கலாம், ஆனால் திரைப்படம் வெளியாகவில்லை. சரியான காரணமும் கூறப்படவில்லை. இத்தகைய உச்ச நடிகராக வலம் வந்த ராமராஜன் இடையில் அரசியல்வாதியாகவும் அவதாரம் எடுத்தார். இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது ‘சாமானியன்’ என்னும் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறாராம். இப்படம் வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.