காங்கிரஸின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்!

0
157
#image_title

காங்கிரஸின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்!

கடந்த 2018ஆம் ஆண்டு வருமானவரி கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததாக காங்கிரஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளின் வங்கி கணக்கை வருமானவரித்துறை முடக்கியது.

வருமான வரிக்கணக்கை தாமதமாக தாக்கல் செய்ததால் முடக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை 210 கோடி ரூபாய் அபராதம் செலுத்தி மீட்டுக் கொள்ளுமாறு கூறியது.

இந்தநிலையில் காங்கிரஸ் மீது விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் கட்சி சார்ப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தொடரப்பட்டது.

இந்த மனுவை விசாரணை செய்த டெல்லி உயர்நீதிமன்றம் காங்கிரஸின் மனுவை தள்ளுபடி செய்தது, மேலும் வருமான வரித்துறையின் மேல்முறையீட்டு தீர்பாயத்தின் செயல் சரியே என கருத்து தெரிவித்துள்ளது.