தமிழகத்தில் மக்களை வாட்டி வதைக்கும் வெப்பம்- சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அதிர்ச்சி அறிக்கை!!

0
174
#image_title

தமிழகத்தில் மக்களை வாட்டி வதைக்கும் வெப்பம்- சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அதிர்ச்சி அறிக்கை!!

வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு கோடை காலம் துவங்குவதற்கு முன்னதாகவே வெயில் சுட்டெரிக்க துவங்கியுள்ளது. எப்போதும் மார்ச் மாத இறுதியில் இருந்து தான் வெயில் அதிகரித்து காணப்படும். ஆனால் இம்முறை பிப்ரவரி மாத இறுதியில் இருந்தே வெயில் அதிகரித்து விட்டது. இந்த வெப்பத்தை தாங்கி கொள்ள முடியாமல் தவிக்கும் மக்கள் மழை ஏதேனும் வந்து நம்மை காப்பாற்றி சற்று குளிர வைத்து விடாதா..என்னும் எதிர்பார்ப்பில் உள்ளனர் என்றே கூறலாம். இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வானிலை குறித்த முன்னறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது.

வறண்ட வானிலை நிலவும்

மேற்கூறியபடி வானிலை அறிக்கை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மார்ச் 13(இன்று) முதல் மார்ச் 19ம் தேதி வரை புதுச்சேரி, தமிழ்நாடு, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்று குறிப்பிட்டுள்ளது.

வெப்ப நிலை அதிகரிப்பு குறித்த தகவல்

தமிழகத்தின் ஒருசில இடங்களில் வழக்கத்திற்கு மாறாக நாளை வெப்ப நிலை 2 முதல் 3 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரித்து காணப்படலாம். வரும் 17ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை மற்றும் ஒருசில இடங்களில் ஈரப்பதம் இருக்கும் காரணத்தினால் அசெளகரியமான சூழல் ஏற்படக்கூடும்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் கொஞ்சம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்ஸியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்ஸியஸ் வரை இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.