உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. அதுமட்டும் இல்லாமல் அனைத்து சேவைகளும் முடக்கத்தில் உள்ளன. இந்த வைரஸ் சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2 கோடியே 20 லட்சத்தை தாண்டியது.
இந்த கொடிய நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கி வருகிறது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மருத்துவத்துறையினர் தீவிரமாக போராடி வருகின்றனர். இந்த கொடிய தொற்றுக்கு இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட்டு பல்கலைக்கழகம் அந்த நாட்டு அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்துடன் உருவாக்கி உள்ள மருந்து அதிக நம்பகத்தன்மை அளிப்பதாக கூறப்படுகிறது. இந்த தடுப்பூசியின் விலை ஐரோப்பிய நாடுகளை விட குறைவாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.