என் வாழ்கையில் மோசமான நேரம் என்றால் இதுதான்?

Photo of author

By Parthipan K

ஐ.பி.எல் தொடரை இந்த ஆண்டு இந்தியாவில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போட்டியை ஐக்கிய அரபு அமிரகதிற்கு மாற்றப்பட்டது. இதற்காக எட்டு அணி வீரர்களும் துபாய்க்கு சென்று விட்டனர். அங்கு 6 நாள் கிரிக்கெட் வீரர்கள்  தனிமைப்படுத்தப்படுவார்கள். கடந்த முறை பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்ட அஸ்வின் இந்த முறை டெல்லி அணிக்காக விளையாட உள்ளார். இந்நிலையில் தனிமையில் இருந்த அந்த ஆறு நாட்கள் மிகவும் மோசமான நேரம் என்று அஸ்வின்  தெரிவித்துள்ளார். என்னைப் பொறுத்த வரைக்கும் இந்த ஆறு நாட்கள் எனது வாழ்க்கையில் மிகவும் மோசமான நேரம்.
ஏனென்றால், முதல்நாளில் நான் வெளியே பார்க்கும்போது, துபாய் ஏரியை பார்க்க முடிந்தது. வலது பக்கம் பார்க்கும்போது என்னால் புர்ஜ் கலிபாவை பார்க்கமுடியும், மிகவும் சிறப்புமிக்க இடம். இருந்தாலும் எத்தனை நாட்களுக்கு வெளியில் இருந்தே பார்க்க முடியும்?. மேலும், வெயில் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. நான் பொதுவாக அதிக அளவில் செல்போன் பார்க்க மாட்டேன், அதை நீண்ட நேரம் பயன்படுத்த மாட்டேன். ஆனால் கடந்த வாரத்தில் எனது முழு டேட்டாவும் தீர்ந்து விட்டது என்று கூறினார்.