திரிஷா இல்லைனா நயன்தாரா என போகும் காலத்தில் இப்படியும் ஓர் காதலா?

Photo of author

By Rupa

திரிஷா இல்லைனா நயன்தாரா என போகும் காலத்தில் இப்படியும் ஓர் காதலா?

கொரோனா தொற்று காலத்தில் நமது இந்தியாவில் பல உயிர்களை இழந்து வருகிறோம்.இந்நிலையில் கொரோனாவை அடுத்து மற்ற காரணங்களாலும் மனித உயிர்களை நாள்தோறும் இழந்து தான் வருகிறோம்.இந்த காலக்கட்டத்தில் ஆண்கள் தங்களுக்கு பிடித்த பெண்ணிடம் காதலை சொல்லிவிட்டு அந்த பெண் ஒப்புக்கொள்ள வில்லை என்றால் அந்த பெண் மீது ஆசிட் வீசுவது,கொலை செய்வது,ஏன் கடத்திக்கொண்டு போவது என நாள்தோறும் ஓர் சம்பவத்தை பார்த்து வருகிறோம்.அந்தவகையில் தற்போது இந்த நபர் செய்த காரியம் ஓர் பக்கம் காவிய காதலாக இருந்தாலும் கூட மறுபக்கம் வருத்தமடைய செய்கிறது.

சென்னையை சேர்ந்த ஆண் ஒருவர் வெகு காலமாக தனது பக்கத்தில் வசிக்கும் ஆனந்தி என்னும் பெண்ணை காதலித்து வநதுள்ளார்.இது ஒரு தலை காதலாகவே இருந்துள்ளது.அதனையடுத்து தற்போது கொரோனா காலக்கட்டம் என்பதால் அப்பெண்ணை பார்க்க முடியாமல் தவித்து வந்துள்ளார்.அதனால் மனவேதனைக்கு தள்ளப்பட்டுள்ளார்.அதனையடுத்து அந்த பெண்ணிடம் காதலை சொல்லிவிடலாம் என பலமுறை யோசித்தும் அதனை கைவிட்டுள்ளார்.ஆனால் இந்த கொரோனா காலக்கட்டத்தில் அந்த பெண்ணை பாரக்கமுடியா வருத்தத்தில் இருந்ததால் ஓர் நாள் அந்த பெண்ணிடம் தன் காதலை கூறியுள்ளார்.

அந்த பெண் அவர் காதலுக்கு மறுப்பு தெரிவித்து விட்டது.முன்னதாகவே மன வேதனையில் இருந்தவர்,இந்த பெண் அவரது காதலை ஏற்க வில்லை என்றதும் பயங்கர மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.அந்த பெண் இல்லாத வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியாமல் அந்த வாலிபர் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் அவர் அறைக்குள் தூக்கு மாடி தற்கொலை செய்துகொண்டார்.வெளியே சென்றுவிட்டு வந்து பார்த்த அவரது அம்மா,அப்பாவிற்கு இது மிகவும் அதிர்சிகரமாக இருந்தது.அதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி உடற்கூர் ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.

இக்காலத்தில் இப்படிப்பட்ட காதலா என அனைவரும் வியக்கவைக்கும் விதத்தில் இருந்தாலும் ஒரு பக்கம் அவர் இறந்தது பெரும் துக்கமாக உள்ளது.இக்கால வாலிபர்கள் இம்மாறியான காரியங்களுக்காக தங்களின் உயிரை துச்சமாக இழக்க கூடாது.இக்காலத்தில் இளைஞர்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து வர வேண்டும்.அதேபோல பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் எந்த பாதையில் செல்கிறார்கள் என்று அவ்வபோது கவனிக்க வேண்டும்.