உங்கள் குழந்தைக்கு மலச்சிக்கல்? 5 நிமிடத்தில் சரி செய்ய உதவும் வீட்டு வைத்தியம்!!

0
46
#image_title

உங்கள் குழந்தைக்கு மலச்சிக்கல்? 5 நிமிடத்தில் சரி செய்ய உதவும் வீட்டு வைத்தியம்!!

இன்றைய காலத்தில் மலசிக்கல் பாதிப்பு எளிதான ஒன்றாகி விட்டது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் பிரச்சனையாக இருக்கின்றது. இந்த மலச்சிக்கல் பாதிப்பால் பெரியவர்களை விட குழந்தைகள் தான் அதிகம் அவைதிப்படுகின்றனர்.

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட காரணம்:-

*எளிதில் செரிமானம் ஆகாத உணவு

*தேவையான நீர் பருகாமல் இருத்தல்

*நார்ச்சத்து மற்றும் நீர்சத்து குறைபாடு

*உடல் சோர்வு

*உடல் நலக் கோளாறு

மலச்சிக்கல் பாதிப்பு நீங்க எளிய வழி இதோ:-

தீர்வு 1:

தேவையான பொருட்கள்:-

*வாழைப்பழம் – 1 துண்டு (மீடியம் சைஸ்)

*ஆளிவிதை – 1 தேக்கரண்டி

*தயிர் – 1 தேக்கரண்டி(புளிப்பு இல்லாத தயிர் )

*ஸ்ட்ராபெரி – 1

செய்முறை:-

முதலில் ஒரு வாழைப்பழத்தை தோல் நீக்கி 2 துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அதில் பாதி வாழைப்பழ துண்டை மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும். பின்னர் 1 தேக்கரண்டி புளிப்பு இல்லாத தயிர் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் 1 ஸ்ட்ராபெரி பழத்தை போட்டு தண்ணீர் ஊற்றமால் மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

இதை ஒரு பவுலுக்கு மாற்றி கொள்ளவும். அடுத்து 1 தேக்கரண்டி ஆளிவிதையை அதில் சேர்த்து கலந்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கவும். பின்னர் சில நிமிடங்களில் குழந்தைகளின் உடலில் அடைப்பட்டு கிடந்த மலம் முழுவதும் வெளியேறத் தொடங்கும்.

தீர்வு 2:

தேவையான பொருட்கள்:-

*தண்ணீர்

*உலர் திராட்சை

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடு படுத்தவதும். பின்னர் அடுப்பை அணைத்து அதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும். சூடு படுத்திய நீர் வெது வெதுப்பாக வந்ததும் குழந்தைகளுக்கு குடிக்க கொடுக்கவும். இதை காலையில் எழுந்ததும் செய்ய வேண்டும்.

பின்னர் குழந்தைகளுக்கு 4 முதல் 5 உலர் திராட்சையை சாப்பிட கொடுக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் உடலில் தேங்கி கிடந்த நாள்பட்ட மலம் வெளியேறி அவர்களின் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.