கண் பார்வை சீக்கிரம் குறைந்து விட்டதா!!? இதோ கண் பார்வையை அதிகரிக்கும் ‘ஐ பூஸ்டர்’ பானம்!!! எவ்வாறு செய்வது என்று பாருங்கள்!!!

Photo of author

By Sakthi

கண் பார்வை சீக்கிரம் குறைந்து விட்டதா!!? இதோ கண் பார்வையை அதிகரிக்கும் ‘ஐ பூஸ்டர்’ பானம்!!! எவ்வாறு செய்வது என்று பாருங்கள்!!!

நமக்கு ஏற்படும் கண் பார்வை குறைபாடு பிரச்சனையை சரி செய்வதற்கும் கண் பார்வையை அதிகரிக்கவும் உதவும் ‘ஐ பூஸ்டர்’ பானத்தை எவ்வாறு தயார் செய்வது என்று இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

நாம் தொடர்ந்து அதிக நேரம் கம்பியூட்டர், தொலைக்காட்சி, செல்போன் பயன்படுத்தி வருகிறோம். இதனால் பலருக்கும் கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். கண் வலி, கண் பார்வை குறைபாடு, கண் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இந்த பிரச்சனையை சரி செய்ய உதவும் பானத்தை தயாரிப்பது பற்றியும் இதற்கு தேவையான பொருள்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

இந்த பானத்தை தயார் செய்ய தேவையான பொருள்கள்…

* பாதாம் – 10

* கற்கண்டு – சிறிய அளவில் உள்ளது

* பால் – தேவையான அளவு

* நெய் – சிறிதளவு

* சோம்பு – 2 ஸ்பூன்

இந்த பானத்தை தயார் செய்யும் முறை…

ஒரு மிக்சி ஜார் எடுத்துக் கொண்டு அதில் பாதாம், சோம்பு, கற்கண்டு ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர் இதில் அரைத்து வைத்துள்ள கலவையில் சிறதளவு நெய் சேர்த்து அதை பாலில் சேர்த்துக் கொள்ளவும். பிறகு இதை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பிறகு இதை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். பின்னர் இதை அப்படியே குடிக்கலாம். இதை இரவு நேரத்தில் தொடர்ந்து குடிக்க வேண்டும்.

இந்த பானத்தை தொடர்ந்து குடித்து வந்தால் கண் பார்வை பிரச்சனை குறைகின்றது. இதன் மூலம் நமது கண்கள் குளிர்ச்சி அடைகின்றது. இதனால் கண் எரிச்சல் பிரச்சனை சரியாகின்றது. மேலும் இதன் மூலம் கண்களில் உள்ள நரம்புகள் மற்றும் செல்கள் வலிமை பெறும்.