தழும்புகள் அழகை கெடுக்கிறதா? கவலை வேண்டாம்? இதோ பாட்டி வைத்தியம்!!

0
46
#image_title

தழும்புகள் அழகை கெடுக்கிறதா? கவலை வேண்டாம்? இதோ பாட்டி வைத்தியம்

நாம் அன்றாடம் சில இறுக்கமான உடையை அணிந்தாலோ அல்லது அம்மை நோய், பிரசவம், முகப்பரு, அறுவை சிகிச்சை ஆகியவற்றால் நமக்கு தழும்புகள் ஏற்படும். மேலும், தீக்காயங்கள், விபத்து ஏற்பட்ல் நமக்கு தழும்புகள் ஏற்படுகிறது.

தழும்புகள் நம்முடைய அழகை பாதித்துவிடும். சில தழும்புகள் எளிதில் மறைந்து விடும். ஒரு சில தழும்புகள் நம் வாழ் நாள் முழுவதும் அப்படியே இருக்கும். முகத்திலோ அல்லது கை கால்களிலோ தழும்பு ஏற்பட்டால் அது நம் அழகை கெடுத்து விடும்.

சரி இந்த மாதிரியான தழும்புகளை இயற்கையாக நம் உடலிலிருந்து எப்படி மறையவைக்கலாம் என்று பார்ப்போம் –

தக்காளிச் சாறு

தக்காளியில் வைட்டமின்கள் அதிகமாக இருப்பதால், அவை நம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, தழும்புகளை மறைய வைக்கும் உதவி செய்யும். அதனால், தக்காளியை இரண்டு துண்டுகளாக வெட்டி, அதன் சாற்றை தழும்பு உள்ள இடத்தில் தடவி வந்தால் தழும்புகள் நாளைடைவில் மறையும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு தீக்காயங்களை போக்கும் பொருளாக விளங்குகிறது.எலுமிச்சை சாற்றை தினமும் தீக்காயம் உள்ள இடத்தில் தடவினால் தீக்காயம்  நாளடடைவில் மறைந்து போகும்.

கற்றாழை

கற்றாழையில் நிறைய மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. இந்த ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் தழும்புகள், தீக்காயம் மறையும்.

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய்யை தழும்புகள் மற்றும் தீக்காயங்கள் இருக்கும் இடத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்தால், தழும்புகள் மறைந்து உடல் மின்னும்.

பால்

பாலில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. தினமும் குளிக்கும் முன்பு, பாலை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி வந்தால் தழும்புகள் மறையும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் பல மருத்துவ நன்மைகள் கொண்டுள்ளது. ஆலிவ் ஆயில் தழும்புகள் இருக்கம் இடத்தில் தினமும் காலையும், மாலையும் தடவி வந்தால், தழும்புகள் எளிதில் மறையும்.

சந்தன பவுடர்

சந்தன பவுடரை மற்றும் ரோஸ் வாட்டரை பாலுடன் சேர்த்து கலந்து தழும்புகள் இருக்கும் பூசி வந்தால் தழும்புகள் மறையும்.

author avatar
Gayathri