உங்கள் முன் நெற்றி முடி ஏறிக் கொண்டே செல்கிறதா? அப்போ மூலிகை எண்ணெய் அங்கு தடவுங்கள்..!!

Photo of author

By Divya

உங்கள் முன் நெற்றி முடி ஏறிக் கொண்டே செல்கிறதா? அப்போ மூலிகை எண்ணெய் அங்கு தடவுங்கள்..!!

அதிகப்படியான மன அழுத்தம், டென்ஷன், முறையற்ற தூக்கம், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் முன் நெற்றி முடி உதிர்வு ஏற்படத் தொடங்கி விடுகிறது. இவை நம் முக அழகு கெடுக்கும் ஒன்றாக இருக்கிறது.

இந்த முன் நெற்றி முடி உதிர்வு பாதிப்பை ஆரம்ப நிலையில் சரி செய்வது மிகவும் அவசியம் ஆகும். இதற்கு இயற்கை முறை வழி சிறந்த ஒன்றாகவும், எந்த ஒரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத வகையிலும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*மருதாணி பொடி

*நல்லெண்ணெய்

*கருஞ்சீரகம்

*நெல்லிக்காய் பொடி

*கறிவேப்பிலை பொடி

செய்முறை:-

முதலில் ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி மருதாணி இலை பொடி, 1 தேக்கரண்டி கருவேப்பிலை பொடி மற்றும் 1 தேக்கரண்டி நெல்லிக்காய் இலை பொடி சேர்த்துக் கொள்ளவும்.

பின்னர் நல்லெண்ணெய் தேவையான அளவு மற்றும் 1/2 தேக்கரண்டி கருஞ்சீரகம் சேர்த்துக் கொள்ளவும்.

இந்த ரெமிடியை இரவு தூங்கும்போது தலைக்கு தேய்த்து நன்கு மசாஜ் செய்து காலையில் ஷாம்பூ அல்லது சிகைக்காய் தேய்த்து குளிக்க வேண்டும்.

இவ்வாறு தோடர்ந்து செய்து வருவதன் மூலம் முன் நெற்றி முடி உதிர்வு தடுக்கப்பட்டு அவை வளரத் தொடங்கும்.