உங்கள் தலையில் அதிகளவு முடி கொட்டுகிறதா? அப்போ இந்த ஆயிலை பயன்படுத்தி பலன் பெறுங்கள்!!

0
222
#image_title

உங்கள் தலையில் அதிகளவு முடி கொட்டுகிறதா? அப்போ இந்த ஆயிலை பயன்படுத்தி பலன் பெறுங்கள்!!

மன அழுத்தம்,ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் அதிகளவு முடி கொட்டும்.இதை கட்டுப்படுத்தி புதிய முடி வளர வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை எண்ணெயை தலைக்கு பயன்படுத்தி வாருங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய்
2)செம்பருத்தி இலை
3)செம்பருத்தி பூ
4)நெல்லிக்காய் வற்றல்
5)கறிவேப்பிலை

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 1/2 கைப்பிடி அளவு செம்பருத்தி இலை,1/2 கைப்பிடி செம்பருத்தி பூ,1/4 கப் பெரு நெல்லிக்காய் வற்றல் மற்றும் 1 கப் கறிவேப்பிலை சேர்த்து மிதமான தீயில் 1/2 மணி நேரத்திற்கு கொதிக்க விடவும்.

பிறகு அடுப்பை அணைத்து எண்ணெயை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலில் ஊற்றி சேமித்துக் கொள்ளவும்.இந்த மூலிகை எண்ணெயை தலைக்கு தடவி வந்தால் முடி உதிர்தல் நின்று முடி நன்கு அடர்த்தியாக வளரும்.

Previous articleசருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் குளியல் பொடி!! இதை தயாரிப்பது சுலபமே!
Next articleஉங்கள் பிள்ளைகள் ஆரோக்கியமாக வளர இந்த ஹெல்த் மிக்ஸ் கஞ்சி கொடுங்கள்!!