உங்கள் தலை முடி அதிகளவு உதிர்கிறதா? அப்போ இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!

0
32
#image_title

உங்கள் தலை முடி அதிகளவு உதிர்கிறதா? அப்போ இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!

நம்மில் பலர் முடி உதிர்வு பாதிப்பால் அவதி அடைந்து வருகிறோம். இதற்கு வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மாற்றம் காரணமாக சொல்லப்படுகிறது. நம் தலை முடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காவிட்டால் முடி உதிர்தல், வழுக்கை உள்ளிட்ட பாதிப்புகளை நம் இளம் வயதில் சந்திக்கும் நிலை ஏற்பட்டு விடும்.

தலைமுடி உதிரக் காரணங்கள்:-

*பொடுகு தொல்லை

*முறையற்ற தூக்கம்

*மன அழுத்தம்

*இரசாயனம் கலந்த ஷாம்புவை தலைக்கு உபயோகிப்பது

தேவையான பொருட்கள்:

*பச்சை பயறு – 2 தேக்கரண்டி

*கேழ்வரகு மாவு – 1 தேக்கரண்டி

*தக்காளி – 1

*பீன்ஸ் – 1 கப் (நறுக்கியது)

*இந்து உப்பு – தேவையான அளவு

*மிளகுத் தூள் – சிறிதளவு

*பூசணி விதை – 1 தேக்கரண்டி

*சூரியகாந்தி விதை – 1 தேக்கரண்டி

*வால் நட்ஸ் – 1

செய்முறை…

அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் 2 தேக்கரண்டி ஊறவைத்த பச்சை பயறு, காய்கறிகளை சேர்க்கவும்.

பின்னர் சூரியகாந்தி, பூசணி விதை மற்றும் வால் நட்ஸை தவிர்த்து மற்ற பொருட்களை அதில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை விட்டு அடுப்பை அணைக்கவும்.

விசில் நின்றதும் குக்கரை திறந்து 1 தேக்கரண்டி கேழ்வரகு மாவு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் 10 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

பின்னர் அடுப்பை அணைத்து தயார் செய்து வைத்துள்ள சூப்பை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி அதில் வால் நட்ஸ், சூரியகாந்தி மற்றும் பூசணி விதைகளை சேர்த்து சாப்பிடவும். இவ்வாறு செய்தால் முடி உதிர்வு நின்று முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

சூப் செய்ய பயன்படுத்திய பச்சை பயறு மற்றும் இதர பொருட்களில் உள்ள புரதம் முடி உதிர்வை தடுத்து முடியின் நீளத்தை அதிகரிக்கவும், அவற்றை வலுப்படுத்தவும் உதவுகிறது.