Breaking News, Education, State

இனி புதன்கிழமை தோறும் பள்ளிகளில் இது கட்டாயம்! மாணவர்களுக்கான அசத்தல் திட்டம்!

Photo of author

By Rupa

இனி புதன்கிழமை தோறும் பள்ளிகளில் இது கட்டாயம்! மாணவர்களுக்கான அசத்தல் திட்டம்!

தற்பொழுதைய காலகட்டத்தில் படிப்பை விட மொழி என்பது முதன்மை வகிக்கிறது. அந்த வகையில் பல பெற்றோர்கள் லட்சக்கணக்கில் பணத்தைக் கட்டி தனியார் பள்ளியில் தங்களது பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர். அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் தங்களது பிள்ளைகள் ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளில் ஆவது சரளமாக ஆங்கிலம் பேச வேண்டும் என்பதுதான்.

அரசு பள்ளியின் மேல் நம்பிக்கை இல்லாமல் இவ்வாறு தனியார் பள்ளியில் சேர்க்கின்றனர். ஆனால் பல இடங்களில் அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளைப் போலவே மாறி உள்ளது. அந்த வகையில் தனியார் பள்ளியைப் போலவே அரசு பள்ளி மாணவர்களும் ஆங்கிலத்தில் சரளமாக பேச சென்னை மாநகராட்சி புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இனி வாரத்தில் புதன் கிழமை அன்று  காலை இறைவழிபாட்டிற்கு பிறகு ஏதோ ஒரு தலைப்பில் ஆங்கிலத்தில் பேச திட்டமிட்டுள்ளனர். இது அவர்கள் படிக்கும் பாட சம்பந்தமாக கூட தலைப்பு இருக்கலாம் என்று கூறியுள்ளனர். இந்தப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்திய பிறகு நாளடைவில் அனைத்து அரசு பள்ளிகளிலும் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் கொண்டு வருவதன் மூலம் மாணவர்களுக்கு மேடை பேச்சுக்கான பயம் நீங்கும். மேலும் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடவும் மாணவர்கள் முன்வருவர்.

FIFA:உலக கோப்பை கால்பந்து போட்டி! கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பிரார்த்தனை!

தனியார் பேருந்திற்கு ரூ 25000 அபராதம்! மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை! 

Leave a Comment